
'மண்டாடி' படத்தின் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் சூரி, 'பரோட்டா சூரி' என்ற பெயர் மக்களாகக் கொடுத்தது தான் என விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது கதையின் நாயகனாக மாறியுள்ளதாகவும், ஆரம்பத்திலிருந்து தனது பெயர் சூரி மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் எதிர்காலத்தில் இருவரும் இணைந்து நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.