
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் தன்வி ஷர்மா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பி.வி.சிந்து தாய்லாந்தின் சுபனிதா கேடேதோங்கை 21-14, 8-21, 23-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
தன்வி ஷர்மா சக நாட்டு வீராங்கனை இஷா பரூவாவை 21-12, 21-12 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.