
திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டன்பாளையத்தில் வசித்த செவிலியர் உத்ரா, பணி முடிந்து வீடு திரும்பாத நிலையில் காணாமல் போனார்.
பின்னர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காட்டுப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் அணிந்திருந்த தாலிக்கொடியை திருட கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
உத்ரா பணிபுரிந்த மருத்துவமனையில் சக ஊழியரான சரவணன் என்பவரே இந்த கொலையை செய்து தாலிக்கொடியை அபகரித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.