
நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறவுள்ள 80-வது சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லி செங்கோட்டை பகுதி பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் வீடியோ பகுப்பாய்வு வசதி கொண்ட 1,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
டெல்லி போலீஸ், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் இணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதோடு, சந்தேகத்திற்குரிய செயல்களை உடனுக்குடன் கண்டறிய பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.