
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் சந்தேரா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ரெட்மி மொபைல் போனை மூத்த சிவில் போலீஸ் அதிகாரி பிஜு திருடியுள்ளார்.
போனைத் திருடிய அவர், சிம் கார்டை உடைத்து எறிந்துவிட்டு, மறுநாள் அந்த போனை வெறும் ரூ.1500-க்கு வேறு நபருக்கு விற்றுள்ளார்.
சிசிடிவி காட்சிகள் மூலமாக முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.