
நாடு முழுவதும் முழுமையான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மின்சாரத் துறை பிரதி அமைச்சர் அக்ரம் இல்யாஸ் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கூரைமீது சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புகளை பொருத்தியுள்ள உரிமையாளர்கள் மறு அறிவித்தல் வரை தமது மின் தகடுகளை முடக்கி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.