
சிவகார்த்திகேயன் நடிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கும் ‘சேயோன்’ படத்தில், நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி வில்லனாக நடிக்கிறார்.
மதுரை பின்னணியைக் கொண்ட கிராமத்துக் கதையான இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.