
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் 20 வயது மகன் பாரன் டிரம்பை குறிவைத்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் மிரட்டல் வீடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளது.
பாரன் டிரம்பை கொல்பவர்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.95 கோடி பரிசு வழங்கப்படும் என அந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரன் டிரம்ப் படிக்கும் பல்கலைக்கழகம் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் தொடர்பான காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றதால் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.