
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டத்தில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, மெட்டா சி.இ.ஓ. மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட தொழில்நுட்பத் தலைவர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையை ஒரு 'அரக்கன்' என்றும் தொழில்நுட்பத் துறையில் அவர் பெற்ற வெற்றியைப் பாராட்டியும் டிரம்ப் குறிப்பிட்டுக் கூறினார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) இனி சூப்பர் நுண்ணறிவு (எஸ்.ஐ.) என அழைக்கப்படும் என உலகின் மிகப்பெரும் தொழில்நுட்ப தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.