
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியை டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த ட்ரின்பகோ அணி கேப்டன் நிகோலஸ் பூரனின் 60 ரன்களுடன் 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது.
ஜமைக்கா அணி 14.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு வெற்றி அறிவிக்கப்பட்டது.