
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110-ஆக உயர்த்தி புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்படவுள்ள 110 மாவட்ட பொறுப்பாளர்கள், செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளனர்.
தற்போதுள்ள மாவட்ட செயலாளர்கள், புதிய மாவட்டங்களுக்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் கட்சித் தலைமைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.