
2027 அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா அங்கு தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, பிசிசிஐ தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
இந்தத் தொடரில் 4 அல்லது 6 ஒரு நாள் போட்டிகள் நடத்தப்பட வாய்ப்புள்ள நிலையில், ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் போட்டிகள் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.