
நயன்தாரா மற்றும் சல்மான் கான் இணைந்து நடிக்கும் பான் இந்தியா திரைப்படமான ‘மான்ஸ்டர்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை பிவிஆர் நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் 2027ஆம் ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.