
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பதுக்கலைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சர்க்கரை மற்றும் அரிசி உற்பத்தி அதிகரித்திருந்தும், பெரு முதலாளிகள் பதுக்குவதே விலை உயர்வுக்குக் காரணம் என மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பகுதியாக அறிவித்து, அங்குள்ள மக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.