/nakkheeran/media/media_files/2026/09/30/278-2026-09-30-19-31-12.jpg)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள 'மீசைய முறுக்கு 2' திரைப்படம் கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அதன் வெற்றி விழா நடைபெற்றது.
இசையமைப்பாளர் தேவா விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு மத்தியில் தனக்கென ஒரு முத்திரை பதிக்கவே கானா பாடல்களைத் கொண்டுவந்ததாகத் தெரிவித்தார்.
பள்ளி காலத்தில் பட்டினம்பாக்கம் ஏரியாவில் நண்பர்களிடம் கானா பாடல்களைக் கற்றுக்கொண்டதாகவும், ஆரம்பத்தில் மற்ற இசையமைப்பாளர்கள் அதை விமர்சித்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.