
கடந்த 5 மாதங்களில் பிரிக்ஸ் நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வணிக வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக சீனாவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டில் ரூ.1,35,375 கோடியிலிருந்து நடப்பு நிதி ஆண்டில் ரூ.1,84,965 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 39 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவும் அதிகமாகவே உள்ளது.