
கொழும்பில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, தனது 600-வது டெஸ்ட் போட்டியை வரலாற்று வெற்றியாக மாற்றியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை மண்ணில் தொடர்ச்சியாக 6 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்தின் சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது.
இந்தியா இதுவரை விளையாடிய 600 டெஸ்ட் போட்டிகளில் 187 வெற்றிகளையும், 188 தோல்விகளையும் சந்தித்துள்ளதுடன், 224 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.