
அமெரிக்க ராணுவ வீரர்களைச் சிறை பிடிப்பவர்களுக்கு அல்லது கொல்பவர்களுக்கு 30 ஆயிரம் டாலர் (ரூ.28 லட்சம்) பரிசு வழங்கப்படும் என ஈரான் ராணுவத் தலைமை தளபதி அமீர் ஹதாமி அறிவித்துள்ளார்.
இந்த செயலை ஈரானியப் பெண் செய்தால் பரிசுத் தொகை இரட்டிப்பாக 60 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்றும், ஈரானிய குடிமக்கள் போரில் பங்கேற்க கோரிக்கை விடுத்ததால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானில் தற்போது அமெரிக்க வீரர்கள் யாரும் இல்லாத நிலையில், ஆக்கிரமிப்பில் ஈடுபடும் வீரர்களைக் குறிவைத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.