கணையப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே துல்லியமாகக் கண்டறிந்து கட்டுப்படுத்த உதவும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த புதிய AI மாதிரியானது 92 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்தன்மையுடன் புற்றுநோய் செல்களை ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து சாதனை படைத்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் மூலம் கணையப் புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை முறைகளை முன்கூட்டியே திட்டமிட்டு அவர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.