
இந்தியாவில் நடைபெற்று வரும் ராஞ்சி டிராபி தொடரில் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடி வரும் ரிங்கு சிங் தொடர்ச்சியாகச் சதங்களை அடித்துள்ளார்.
பீகார் அணிக்கு எதிரான போட்டியில் 112 ரன்களும், கோவா அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 118 ரன்களும் அவர் குவித்துள்ளார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து பிசிசிஐ மீது ரசிகர்கள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.