
அபுதாபியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பியர்ல் ஹெரிடேஜ் இந்திய பள்ளிக்கூடத்தை இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல் திறந்து வைத்தார்.
இந்தத் திறப்பு விழாவில் பள்ளிக்கூட சேர்மன் என்.கே. ராமச்சந்திர மேனன் மற்றும் அமீரக கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அபுதாபியில் வசிக்கும் இந்திய மாணவர்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்தப் புதிய பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.