
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்காக அதிநவீன 'ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரங்கள்' நிறுவப்படும் எனத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பணியாளர்களின் பணிச்சுமை மற்றும் சில்லறைப் பற்றாக்குறையைத் தவிர்க்கும் வகையில் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள 4,000 கடைகளில் இந்த இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன.
இந்த நடைமுறையை விரைந்து முடிக்க மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ள உயர்நீதிமன்றம், அதுவரை தற்போதைய முறையே தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.