
ஜப்பானில் நடைபெற்ற பாரா பாட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத் சக வீரர் குமாரை வீழ்த்தி தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்கள் இரட்டையர் பைனலில் பிரமோத் மற்றும் சுகந்த் கடம் ஜோடி இந்தோனேஷியாவின் ஹிக்மத் மற்றும் பிரெடி ஜோடியிடம் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றது.
இந்தத் தொடரில் வெள்ளி வென்றதன் மூலம் சுகந்த் கடம் சர்வதேச அரங்கில் தனது 100வது பதக்கம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளதுடன், இந்தியா மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளது.