
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மதுபான நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டதை அடுத்து 11 வகை மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இந்த மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
இயற்கையான உற்பத்தி முறைகளைத் தவிர்த்து செயற்கை சுவையூட்டிகளைச் சேர்ப்பது நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.