
தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு 5-வது நாளாக இன்றும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேகமலைப் பகுதியில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக சுருளி அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அருவியில் நீர்வரத்து குறைந்து பாதுகாப்பான சூழல் ஏற்பட்ட பிறகே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.