
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் தனது தாக்குதலில் ரஷ்யாவின் உள்கட்டமைப்புகள் மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் குடோன்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.