
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, முதல்வர் விஜய்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.
குட்டிக்கதைகள் சொல்லாமல் மக்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் அளிக்க வேண்டும் என உதயநிதி வலியுறுத்திய நிலையில், திங்கள்கிழமை தெளிவான விளக்கம் அளிப்பதாக முதல்வர் பதிலளித்தார்.
முதல்வர் அவையை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, கடைசியாக யார் ஓடினார் என்பது அனைவருக்கும் தெரியும் என உதயநிதி விமர்சித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது.