
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) BSBD கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்திற்கு 4 முறை பணம் எடுப்பது மட்டுமே இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 முதல் இந்த வரம்பை மீறி ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து இலவசமாகச் செயல்படும் என வங்கி அறிவித்துள்ளது.