
சைப்ரஸ் நாட்டின் வடகடலோர பகுதியில் 270 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கைரேனியாவில் இருந்து துருக்கியின் டசுகு நகருக்கு சென்ற படகு, கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 237 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 22 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.