
2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி அடித்த வெற்றிச் சிக்ஸரை வீசிய இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியுடன் இணைந்து விளையாடியபோது, 2011 இறுதிப்போட்டி குறித்து அவர் ஒருமுறைகூட பேசவில்லை என்று குலசேகர தெரிவித்துள்ளார்.
தோனி எப்போதும் நிகழ்காலத்தில் கவனம் செலுத்துபவர் என்றும், 2014 டி20 உலகக்கோப்பை வெற்றி 2011 தோல்வியின் வேதனைக்கு ஆறுதலாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.