/nakkheeran/media/media_files/2026/09/11/police-2026-09-11-10-57-33.jpg)
சென்னையில் பெசண்ட் நகர் மற்றும் திருவொற்றியூரில் தவெக நிர்வாகி உள்ளிட்டோர் அடுத்தடுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், ரவுடிகளைக் கண்காணிக்க காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், நேற்றிரவு ஒரே நாளில் சென்னையில் உள்ள சுமார் 70 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.