
ஹங்கேரியின் மெசோகெரெஸ்டெஸ் நகருக்கு அருகே 57 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 போலந்து நாட்டினர் உயிரிழந்தனர்.
விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலும், ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.