
இந்தியாவின் பிராந்திய செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான 'நேவிக்'கினை வலுப்படுத்த என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி-எப் 18 ராக்கெட் மூலம் வருகிற 30-ந்தேதி விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த 'நேவிக்' அமைப்பானது இந்தியா முழுவதற்கும் மற்றும் அதன் எல்லைகளுக்கு அப்பால் சுமார் 1,500 கி.மீ தூரம் வரை இருப்பிடம் மற்றும் நேரத்தகவல்களை வழங்குகிறது.