
முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பங்கரின் மகனான அனயா பங்கர், பாலின உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.
2023-ல் ஹார்மோன் மாற்றுச் சிகிச்சையைத் தொடங்கிய அனயா, 2026-ல் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், தற்போது மாநில மற்றும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
அனயாவின் இந்த வருகைக்கு தென்ஆப்பிரிக்க வீராங்கனை மரிசேன் காப் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அனயா தனது திறமையை நிரூபிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.