
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் கார் மோதியதில், தமிழகத்தைச் சேர்ந்த 8 பொறியியல் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சென்ற கார் அதிவேகமாகச் சென்று விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தீயணைப்புத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த மாணவர்களின் உடல்களை மீட்டனர்.