
சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
அடுத்த கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்ததால் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்குத் தொடக்கமாக அமைய வேண்டும் என்று அவர் கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.