
நடிகை அசின் மற்றும் ராகுல் சர்மா தம்பதியரின் 9 வயது மகளான அரின், கொரியன், ஜப்பானிய, சீன உள்ளிட்ட 12 மொழிகளைப் புரிந்துகொண்டு பேசும் திறனுடன் வளர்ந்து வருகிறார்.
குழந்தையின் வளர்ப்பில் அதிக அக்கறை செலுத்தி வரும் அசின், இதுவரை தனது மகளுக்கு மொபைல் போன் மற்றும் தொலைக்காட்சி போன்ற எந்தவிதமான திரை நேரத்தையும் வழங்கவில்லை.
வீட்டில் புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், 2-ஆம் வகுப்பு படிக்கும் அரின் 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்களைக்கூட வீட்டில் வைத்துள்ளதாக ராகுல் சர்மா தெரிவித்துள்ளார்.