
ஓமனில் நடைபெற்றுவரும் ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜுன் ராஜ்புத் சதமடித்து அசத்தினார்.
தடுமாறிய அணியை மீட்ட அவர் 85 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 107 ரன்கள் குவித்தார்.
இறுதியில் இந்திய அணி 46.3 ஓவர்களில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.