/nakkheeran/media/media_files/2026/09/12/mhc-2026-09-12-18-38-13.jpg)
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த 6 பேரில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், இடைத்தேர்தல் செலவுத் தொகைக்கு அவர்கள் பொறுப்பேற்கும் வகையில் நடைமுறை வகுக்கக் கோரியுள்ளார்.
சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ள அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.