
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிக்கும் சூழலில், எகிப்து துறைமுகத்தில் நின்றிருந்த அமெரிக்க எரிவாயு டேங்கர் கப்பல்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் அல்லது அதன் ஆதரவுப் படைகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், சவுதி அரேபியாவும் ஈராக் மீது தாக்குதல் நடத்திப் போரில் நேரடியாகக் களம் கண்டுள்ளது.
போர் ஆறாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் நடைபெறவுள்ள தேர்தல்களால் போர் வியூகங்கள் குறித்த குழப்பம் சர்வதேச அரசியல் நிபுணர்களிடையே எழுந்துள்ளது.