ஹைதி நாட்டில் ஆயுதமேந்திய வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளனர்.
வன்முறைக் கும்பல்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்த அரசு பாதுகாப்புப் படையினரை குவித்துள்ளது.