Indian Politics
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸிடம் 7 மணி நேரம் மத்தியக் குற்றப்பிரிவு விசாரணை

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸிடம் 7 மணி நேரம் மத்தியக் குற்றப்பிரிவு விசாரணை

Hindu Tamil Thisai50m
THE BRIEF
1

தமிழகத்தில் தனியார் பள்ளிகளிடம் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்த புகாரின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

2

இந்த மோசடி வழக்கில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் ஏற்கனவே ஜூன் 27-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

3

இதுவரை 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.