/nakkheeran/media/media_files/2026/10/01/treatment-ai-image-2026-10-01-10-07-25.jpg)
சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்டம்பர் மாதத்தில் டெங்கு பாதிப்பு இரு மடங்கு அதிகரித்து இருப்பதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் 605 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்கச் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.