
மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு கூடும் சட்டப்பேரவையில், காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் பதிலளிக்கிறார்.
கடந்த 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதற்கு முதல்வர் தெளிவான விளக்கத்தை அளிக்க உள்ளார்.
இன்றைய கூட்டத்தில் அரசினர் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளதோடு, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும் நடைபெற உள்ளன.