
தில்லியில் தொடங்கிய ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றம் 2026 மாநாட்டில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச அளவிலான புவிஅரசியல் சூழலால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தபோதிலும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் கடந்த திங்கள்கிழமை ரூபாய் மதிப்பு ஒரு சதவீதம் உயர்ந்துள்ளது என்றார்.
அடுத்த சில மாதங்களில் 2027-28 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால், தற்போது தான் பரிசீலிக்கும் விஷயங்கள் குறித்துக் கூற இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.