
வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து நிகார் சுல்தானா விலக முடிவு செய்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்ததும் இந்த முடிவை அவர் செயல்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் டி20 கேப்டன் பதவியைத் துறக்கவுள்ள அவர், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக தொடர விருப்பம் தெரிவித்துள்ளார்.