
மேகதாது அணை திட்டத்திற்காக 2,500 ஏக்கர் மாற்று வனநிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ள இந்த திட்டத்திற்காக கர்நாடக அரசு மத்திய அரசிடம் திருத்தப்பட்ட அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 66 டி.எம்.சி. தண்ணீரைச் சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.