
பிரேசில் லீக் ஆட்டத்தில் பஹியா அணிக்கு எதிரான போட்டியின் போது எதிரணி வீரரின் வாயை மூடியதற்காக நெய்மருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறை மீறலில் ஈடுபட்டதாகக் கூறி பிரேசிலின் விளையாட்டு தீர்ப்பாயம் அவருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.
தொடர்ந்து மஞ்சள் அட்டைகளைப் பெற்றதற்காக விதிக்கப்பட்ட மற்றொரு தடையையும் சேர்த்து, அவர் நவம்பர் மாத இறுதியில்தான் களத்திற்கு திரும்புவார்.