
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் போட்டியில், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி திண்டுக்கல் அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி வீழ்த்தியது.
கோவை அணி 16 ஓவர்களில் 171 ரன்கள் குவித்தது; இதில் ஷாருக்கான் 59 ரன்களும், பாலசுப்பிரமணியம் 30 ரன்களும் எடுத்தனர், திண்டுக்கல் அணி 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளைப் பெற்று கோவை கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.