
தென்னாப்பிரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களால் கடந்த சில மாதங்களில் 1.78 லட்சம் அகதிகள் வெளியேறியுள்ளனர்.
வெளியேறியவர்களில் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த 1.15 லட்சம் பேரும், மலாவியைச் சேர்ந்த 56 ஆயிரம் பேரும் அடங்குவர் என்று அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 19 ஆயிரம் பேர் அதிகாரப்பூர்வமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது.